×

களக்காடு அருகே பரபரப்பு வீடுகளில் கருப்புக் கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு

களக்காடு: களக்காடு அருகே வார்டு சீரமைப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழப்பத்தை கிராமம் உள்ளது. இங்கு 950 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த தேர்தல் வரை கீழப்பத்து பகுதி தனி வார்டாக செயல்பட்டு வந்தது. தற்போது களக்காடு பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து வார்டுகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதில் தனி வார்டாக இருந்த கீழப்பத்தை 4 பகுதியாக பிரிக்கப்பட்டு, தனித் தனி வார்டுகளுடன் இணைக்கப் பட்டது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வார்டு சீரமைப்பை மறுபரிசீலனை செய்து, 4 வார்டுகளுடன் இணைக்கப்பட்டதை ரத்து செய்து, மீண்டும் கீழப்பத்தையை ஒரே வார்டாக அறிவிக்க கோரி கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுத்து வந்தனர்.இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் நாளை(பிப்.19) நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று கீழப்பத்தை கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கீழப்பத்தையை ஒரே வார்டாக அறிவிக்க கோரி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும், நாளை ஓட்டு போட செல்ல மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது….

The post களக்காடு அருகே பரபரப்பு வீடுகளில் கருப்புக் கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்: தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalakadam ,Kalakkad ,Kalakkadam ,Dinakaran ,
× RELATED மாவடியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு